இரண்டு சொகுசு கப்பல்களால் இலங்கையில் குவிந்த டொலர்கள்
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 5 ஆம் திகதிகளில் இரண்டு சொகுசு கப்பல்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சாதனை வருமானம் கிடைத்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
அதன்படி, நவம்பர் 30ஆம் திகதி வந்த கப்பலில் 551 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 110 வாகனங்களில் யால பூங்காவை பார்வையிட வந்ததாகவும், அன்றைய தினம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த வருமானம் 6,219,560 ரூபா எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
யால பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள்
டிசம்பர் 5 ஆம் திகதி வந்த கப்பலில் இருந்து 86 சுற்றுலாப் பயணிகள் 18 வாகனங்களில் யால பூங்காவிற்கு வருகை தந்ததாகவும் இதன் மூலம் வருமானம் 9,81,981 எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
யால பூங்காவிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு அதிகமான பயணச்சீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.