புதிய கல்வி சீர்திருத்தத்தின் நோக்கம் இதுதான்: அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை என்பது வெறும் பாடத்திட்ட திருத்தம் மட்டுமல்ல என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
21 ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ளக்கூடிய முழுமையான அறிவைக் கொண்ட ஒரு பிள்ளையை உருவாக்குவதே இந்த கல்வி சீர்திருத்த செயல்முறையின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐந்து கட்டாய பாடங்கள்
இந்த புதிய கல்வி சீர்திருத்த செயல்பாட்டில், நிதி கல்வியறிவு மற்றும் தொழில்முனைவோர் தொடர்பான பாடங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நாலக கலுவெவ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையின் கீழ், ஐந்து கட்டாய பாடங்கள் உள்ளதாகவும் இரண்டு பாடங்களைத் தேர்வு செய்யலாம் என்று கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
