ரஷ்ய அரச தலைவர் புடின் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்
ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினை ஆட்சியை விட்டு நீக்கும் திட்டங்கள் ரஷ்யாவில் தீட்டப்படுவதாக உக்ரைன் இராணுவ உயர் அதிகாரி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் குறித்து உக்ரைன் நாட்டின் தளபதி கைர்யலோ புட்னவோ தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் போரின் நிலவரம், ரஷ்ய அதிபர் புடினின் நகர்வுகள் குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
"உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் வரும் ஓகஸ்ட் மாதம் முக்கிய திருப்பம் நிகழும். இந்த போர் இந்தாண்டே நிறைவடையும். இந்த போரில் ரஷ்யா தோற்கும் பட்சத்தில், புடின் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவரது ஆட்சி தூக்கி வீசப்படும்.
ரஷ்யாவில் புதிய தலைமைக்கான சூழல் உருவாகும். இதற்கான வேலைகள் தற்போதே தொடங்கியுள்ளது. ஆட்சி மாற்றம் என்பதை தடுக்க முடியாது. அத்துடன் ரஷ்ய அதிபர் புடின் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிக மோசமான சூழலில் உள்ளார். இந்த போரில் ரஷ்யா பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. ரஷ்யா பெரும் சக்தி என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இது உண்மை அல்ல" என்றுள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டு வருகிறது. அவருக்கு புற்றுநோய் உள்ளது, பார்க்கின்சன் நோய் உள்ளது, டிமென்டியா நோய் உள்ளது என பல நோய்களை இணைத்து செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதன் உன்மை தன்மை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
