பதற்றத்தில் புடின் - வெளியான அறிவிப்பு
அதிபர் விளாடிமிர் புடின் சமாதானப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருப்பதாகத் தான் நம்பவில்லை என்றும் உக்ரைனிய மக்களுக்கு வசதியாக இருக்கக்கூடிய எந்தத் தீர்வையும் அவர் வழங்க வாய்ப்பில்லை என்றும் ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் காஸ்யனோவ்,தெரிவித்துள்ளார்.
நடுநிலைமை வாக்குறுதிக்கு அப்பால், அதாவது உக்ரைன் நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்க விண்ணப்பிக்காமல் இருப்பது உட்பட, க்ரைமியா ரஷ்யாவின் ஒரு பகுதி என்று “அதிகாரபூர்வ அங்கீகாரம்” பெற வலியுறுத்துவார் என்று காஸ்யனோவ் நம்புகிறார்.
“இது மிகவும் முக்கியமானது. புடின் க்ரைமியா விஷயத்தில் மிகத் தீவிரமாக உள்ளார்,” என்று அவர் பிபிசி செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
காஸ்யனோவ், 2000 முதல் 2004-ஆம் ஆண்டுக்கு இடையில் பிரதமராக இருந்தவர். இரு தரப்புக்கும் இடையிலான தற்போதைய பேச்சுவார்த்தைகளின் விளைவாக எந்தவோர் ஒப்பந்தமும் ஏற்படாது என்றும், ரஷ்ய படைகள் மீண்டும் ஒன்று கூடுவதற்கு மட்டுமே நேரம் கொடுக்கும் எனச் சந்தேகிப்பதாகக் கூறினார்.
புடினும் அவருடைய நெருங்கிய அரசியல் கூட்டாளிகளும் மேற்கத்தைய நாடுகளால் விதிக்கப்பட்ட “பேரழிவுகரமான” பொருளாதாரத் தடைகளின் அளவு குறித்து “பதற்றமாக” இருப்பதாகவும் தடைகள் இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், "அவர் தொடர்ந்து அடக்குமுறை மற்றும் படையெடுப்பை அதிகரிப்பார் என்று நான் நினைக்கிறேன்,” என்று காஸ்யனோவ் மேலும் தெரிவித்துள்ளார்.
