உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி :புடின் தொடர்பில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட சந்தேகம்
உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு (viladymyr putin)விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸின்(pope fransis) இறுதிச் சடங்கில் பங்கேற்க வத்திக்கான்(vatican) சென்ற ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை(volodymyr zelenskyy) சந்தித்து உரையாடினாா்.
ட்ரம்ப்பின் போக்கில் திடீா் மாற்றம்
வத்திக்கானில் ஸெலென்ஸ்கியை சந்தித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய ட்ரம்ப்பின் போக்கில் திடீா் மாற்றம் ஏற்பட்டு, அமைதிக்கான புடினின் விருப்பம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘கடந்த சில நாள்களாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது புடின் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவது சரியல்ல.
தவறாக என்னை வழி நடத்துகிறாரா புடின்
ஒருவேளை, புடின் போரை நிறுத்த விரும்பாமல், என்னை தவறாகத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறாரோ எனும் எண்ணம் எழுகிறது. வா்த்தகத் தடை போன்று இதை வேறுவகைகளில் கையாள வேண்டும். ஏனெனில், ஏராளமான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
