அணு ஆயுத போருக்கு தயாராகும் புடின் - குடும்பம் பதுங்குகுழியில் -ரஷ்ய விஞ்ஞானி பகீர் தகவல்
family
russia
puttin
nuclear war
underground bunker
By Sumithiran
ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் அணு ஆயுதப் போருக்குத் தயாராகி வருவதாக ரஷ்யாவின் முன்னாள் விஞ்ஞானி ஒருவர் இன்று வெளிநாட்டு ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளார்.
புடின் ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார் என்று 61 வயதான விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் சைபீரியாவில் உள்ள நிலத்தடி பதுங்கு குழிக்கு தனது குடும்ப உறுப்பினர்களை அனுப்பியதாகவும் விஞ்ஞானி தெரிவித்தார்.
எனினும், இது வெறும் பதுங்கு குழி மட்டும் அல்ல, சைபீரியாவில் அல்தாய் மலைகளுக்கு அருகில் நிலத்தடியில் கட்டப்பட்ட நகரம் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இணையத்தள வசதிகள் மட்டுமன்றி, சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் இருப்பதாக விஞ்ஞானி வெளிப்படுத்தியுள்ளார்.
