உக்ரைனுடனான அமைதிப்பேச்சுவார்த்தை : இறுதி நேரத்தில் புடின் எடுத்த அதிரடி முடிவு

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Jaso May 15, 2025 12:15 AM GMT
Report

இன்று வியாழக்கிழமை துருக்கி(turkey) இஸ்தான்புல்லில் நடைபெறும் உக்ரைன்(ukraine) போர் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள உள்ளதாக கிரெம்ளின் பட்டியலிட்ட பெயர்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (vladimir putin)இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமை தாங்குவார் என்று கிரெம்ளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதி ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதாகவும், புடினை நேரில் சந்திப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(volodymyr zelenskyy) முன்பு கூறியிருந்தார், மேலும் நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுவதை உறுதி செய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் கூறினார்.

உக்ரைனுடனான அமைதிப்பேச்சுவார்த்தை : இறுதி நேரத்தில் புடின் எடுத்த அதிரடி முடிவு | Putin Not On Attending Ukraine Peace Talks

உக்ரைன் ஜனாதிபதி வியாழக்கிழமை துருக்கிய தலைநகர் அங்காராவில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை சந்திக்க உள்ளார்.

டிசம்பர் 2019 முதல் புடினும் ஜெலென்ஸ்கியும் நேரில் சந்திக்கவில்லை. ரஷ்யாவும் உக்ரைனும் கடைசியாக மார்ச் 2022 இல் இஸ்தான்புல்லில் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தின.

பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : மாகாணமொன்று எடுத்துள்ள அதிரடி முடிவு

பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : மாகாணமொன்று எடுத்துள்ள அதிரடி முடிவு

அதன் பின்னர் உக்ரைனில் சண்டை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ரஷ்யப் படைகள் பெரும்பாலும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் அளவை மெதுவாக விரிவுபடுத்தியுள்ளன.

புடின் விடுத்த அழைப்பு

துருக்கியின் மிகப்பெரிய நகரத்தில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கு "முன்நிபந்தனைகள் இல்லாமல்" புடின் ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார், அதற்கு முன்பு ஜெலென்ஸ்கி நேரில் செல்வதாகவும் ரஷ்ய ஜனாதிபதியும் பயணம் செய்வார் என்று எதிர்பார்த்ததாகவும் அறிவித்தார்.

உக்ரைனுடனான அமைதிப்பேச்சுவார்த்தை : இறுதி நேரத்தில் புடின் எடுத்த அதிரடி முடிவு | Putin Not On Attending Ukraine Peace Talks

சனிக்கிழமை ஐரோப்பிய தலைவர்கள் கியேவில் சந்தித்த பின்னர், மேற்கத்திய சக்திகள் 30 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இஸ்தான்புல்லில் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த புடினின் பரிந்துரைத்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் இந்த வாய்ப்பை ஏற்க வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்த பிறகு, தானே அங்கு பயணம் செய்வதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

இந்தியாவின் அடுத்த பாய்ச்சல் : ட்ரோன்களை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் அடுத்த பாய்ச்சல் : ட்ரோன்களை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

"கொலைகளை நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன். தனிப்பட்ட முறையில்," என ஜெலென்ஸ்கி ஒரு சமூக ஊடகப் பதிவில் எழுதியிருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026