புடின் வெளியிட்ட அறிவிப்பு - நீடிக்கவுள்ள போர்
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் புடினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே இதேபோன்று நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை புடின் நிராகரித்துவிட்ட நிலையில் ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பை அவர் ஏற்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என புடின் தெரிவித்துள்ளார்.
துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் உக்ரைன்-ரஷ்யா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.
