மைத்திரிக்கு தங்க வாளை பரிசளித்த ரஷ்ய அதிபர் புடின்
Colombo
Maithripala Sirisena
Vladimir Putin
By Sumithiran
முன்னாள் அதிபரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபர் புடின் தனக்கு ரத்தினக் கற்கள் பதித்த தங்க வாளை பரிசாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
அதிபராக இருந்தபோது ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட நிலையில் இந்த விருது வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
சிறிலங்கா இராணுவ வீரருக்கு சொந்தமான வாள்
வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றப் போராடிய இந்நாட்டு இராணுவ வீரருக்கு சொந்தமான அந்த வாள் இங்கிலாந்தில் ஏலத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அந்த வாள் கொழும்பு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகளின் வீட்டில் தங்கக் குதிரை
மேலும், தனது மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாக வெளியான செய்தி பொய்யானது என்றும், அந்த வீட்டில் இருந்த சில உணவுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி