ட்ரம் உருவத்தில் புட்டின் - நடுநடுங்கும் ஐரோப்பிய நாடுகள்!!
ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், மிகப் பெரிய சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்ற காலப்பகுதி என்று இந்த நாட்களைக் கூறலாம்.
ஒருபக்கம் புட்டின் ஐரோப்பிய நாடுகளை நேரடியாகவே சவாலுக்கு இழுத்து, ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கப்போவதாகவும், அணுகுண்டுவீசத் தாக்கப்போவதாகவும் எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கின்றார்.
மறுபக்கம் டொனாட் ட்ரம்போ- புட்டினுடைய மற்றொரு பரிமானமாகவே காட்சி தருகின்றார் - ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில்.
.ஐரோப்பிய நாடான கிறின்லான்டை இராணுவத்தை அனுப்பி ஆக்கிரமிக்கப்போகின்றேன் என்று கூறி மிரட்டல்விடுக்கின்றார்..
உக்ரேனின் கனிமவளங்களில் பங்கு கேட்டு நச்சரித்துக்கொண்டிருக்கின்றார்..
ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் ஆட்சிகளைக் கவிழ்க்கும் முயற்சிகளை- எலன் மஸ்கை ஏவிட்டுச் செய்துகொண்டிருக்கின்றார்.
கிட்டத்தட்ட புட்டின் செய்யவேண்டிய காரியங்களை ,ஐரோப்பாவில் ட்ரம் தற்பொழுது செய்துகொண்டிருப்பதாகக் கூறுகின்றார்கள் ஐரோப்பிய வாழ் மக்கள்.
இந்த விடயம் பற்றித் தனது பார்சையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 11 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்