ரஷ்ய படைகள் குறித்து புடின் வெளியிட்ட தகவல்: கேள்விக்குறியாகும் போர் நிறுத்தம்
ரஷ்யாவின் படைகள் முன்னேறி வருவதாகவும் எதிரிப்படை பின்வாங்குகின்றது எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் நான்கு ஆண்டுகளை நெருங்கி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் புடின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய வெற்றி
மேலும் தெரிவித்த அவர், “இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் இன்னும் புதிய வெற்றிகளைக் காண்போம் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
எல்லை முழுவதும் எங்கள் படைகள் முன்னேறி வருகின்றன, எதிரிப்படைகள் பின்வாங்குகின்றனர்.

இந்த மோதலை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகும் முயற்சியை கைவிட வேண்டும்.
ரஷ்யா கைப்பற்றி தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் நான்கு பிரதேசங்களிலிருந்தும் உக்ரைன் படைகள் விலக வேண்டும்.
சில இடங்களில் வேகமாகவும் மற்ற இடங்களில் மெதுவாகவும் ஆனால் எல்லா திசைகளிலும் எதிரிகள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 12 மணி நேரம் முன்