கோர்பச்சேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்கமாட்டார் புடின்
புடின் கலந்து கொள்ள மாட்டார்
சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மிகைல் கோர்பச்சேவின் இறுதிச் சடங்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார் என கிரெம்ளின் உறுதி செய்துள்ளது.
அதிபர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடினின் பணி அட்டவணை அவரை சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்காது என்றார்.
மொஸ்கோ மருத்துவமனையில் இறுதி அஞ்சலி
கோர்பச்சேவ் தனது 91வது வயதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த அவருக்கு மொஸ்கோ மருத்துவமனையில் ரஷ்ய தலைவர் மரியாதை செலுத்தியதாக அவர் கூறினார்.
வியாழன் அன்று, மொஸ்கோவின் மத்திய மருத்துவ மருத்துவமனையில் கோர்பச்சேவின் உடல் தாங்கிய சவப்பேழை அருகே புடின் சிவப்பு ரோஜாக்களை வைப்பதை ரஷ்ய அரசு தொலைக்காட்சி காட்டியது.
அதிபரின் பணி அட்டவணை
"துரதிர்ஷ்டவசமாக, அதிபரின் பணி அட்டவணை அவரை செப்டம்பர் 3 ஆம் திகதி இறுதி நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்காது, எனவே அவர் இன்று தனது இறுதி அஞ்சலியை செலுத்த முடிவு செய்தார்," என பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோர்பச்சேவின் இறுதிச்சடங்கு, மொஸ்கோவின் ஹோல் இல் சனிக்கிழமை நடைபெறும்.
பின்னர், 1999 இல் இறந்த அவரது மனைவி ரைசாவின் நோவோடெவிச்சி கல்லறைக்கு அருகில் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும்.

