கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் கஞ்சன!!
கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அந்நாட்டின் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் சாட் ஷெரிடா அல் காபியை இன்று சந்தித்துள்ளார்.
அரசுடைமையான கட்டார் எனர்ஜி மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இலங்கை எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெட்ரோலிய உற்பத்திகள், இயற்கை திரவ எரிவாயு (LNG) மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) என்பவற்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
Met with HE Saad Sherida Al-Kaabi, the Minister of State for Energy Affairs and the President and CEO of Qatar Energy to discuss the supply of Petrolieum Products, LPG and LNG to SL to overcome the Energy crisis with the assistance of Qatar Energy and The Qatar Development Fund. pic.twitter.com/jLQPqssSon
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 28, 2022
இலங்கையின் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உதவிகளை பெறும் நோக்கில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று கட்டார் நோக்கி பயணமாகினர்.