ஐ.சி.சி ஒருநாள் உலகக் கிண்ணத்திற்காக மோதும் நான்கு அணிகள்; எந்த அணிக்கு இடம்
ஐ.சி.சி ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளுக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெறும் என்பதோடு மிகுதி அணிகள் தகுதிகாண் போட்டிகளின் மூலமே தெரிவு செய்யப்படும்.
இந்த உலக கிண்ண போட்டிகளுக்கு முதல் 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளதுடன், கடைசியாக ஒரு அணியை தெரிவு செய்வதற்கு கடுமையான போட்டி நிலவுகின்றது.
நான்கு அணிகள் போட்டி
இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன.
தகுதிகாண் போட்டிகளில் விளையாடாது நேரடியாக உலக கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறும் எட்டாவது அணியாக உள்நுழைவதற்கு கடுமையான போட்டி இடம்பெறுகிறது.
அந்தவகையில், இந்த எட்டாவது இடத்திற்கு நான்கு அணிகள் போட்டி போடுகின்றன.
இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் போட்டியிடுகின்றன.
எஞ்சியுள்ள போட்டிகள், புள்ளிகள்
இந்த நான்கு அணிகளில், மேற்கிந்திய தீவுகளுக்கு அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துவிட்டதுடன், இலங்கை அணிக்கு 3 போட்டிகளும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு 6 போட்டிகளும் எஞ்சியுள்ளன.
இந்த அணிகளுக்கான போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னர் புள்ளிகளின் அடிப்படையில் ஒரு அணி தெரிவு செய்யப்படும்.
தற்போது மேற்கிந்திய தீவுகள் 88 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளதுடன், தென்னாபிரிக்க அணி 59 புள்ளிகளுடன் உள்ளது.
இனிவரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளின் எஞ்சியுள்ள போட்டிகளே நேரடியாக தகுதி பெறும் எட்டாவது அணியை தீர்மானிக்கும்.
