மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகள்: மதுவரித் திணைக்களம் நடவடிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கோபா குழு அறிவுறுத்தல்
மதுபானங்களின் தரத்தை உரிய வகையில் பேணுமாறு கோபா குழு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் முதல் தடவையாக இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ள மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விற்பனை செய்யப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாடளாவிய ரீதியாக உள்ள மதுபானசாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் விநியோக நிலையங்களில் மதுபானங்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உரிய தரத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
