இலங்கைக்கான வரி விதிப்பு: ட்ரம்பின் அறிவிப்பால் ஆட்டம் காணுமா இலங்கை…!
Donald Trump
Sri Lanka
United States of America
By Sumithiran
இலங்கை ஏற்றுமதி பொருட்களுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறை
இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்த வரி 44% ஆகும்.
மேலும் ஏழு நாடுகளுக்கு வரப்போகும் அறிவிப்பு
வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (09) அறிவித்தார்.
இலங்கையைத் தவிர, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் 25% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் 20% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


