யாழில் பெருந்தொகையில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Pakirathan
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதி காடொன்றிலிருந்து பெருந்தொகையான கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள் இன்று (21.05.2023) மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சுற்றிவளைப்பில் இரண்டு மூட்டைகளில் 65 கிலோ எடையுடைய 26 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
கஞ்சாப் பொதிகள்
மீட்கப்பட்ட குறித்த கஞ்சாப் பொதிகள் ஊர்காவற்துறை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி