தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிறிலங்கா அதிபர் உண்மையிலேயே அக்கறையுடன் உள்ளாரா - சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

By Sathangani Jul 30, 2023 10:27 AM GMT
Report

சிறிலங்கா அதிபர்  ரணில் விக்ரமசிங்க கடந்த 20.07.2023 அன்று புதுடில்லி சென்று இந்திய பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களைச் சந்தித்த வேளையில் இந்தியாவினால் சிறிலங்கா அதிபருக்கு 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவமாறு வலியுறுத்தப்பட்டது.

அதன் தொடர் நடவடிக்கையாக கடந்த 26.07.2023 அன்று மாலை அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.

மேற்கண்ட கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.

மூன்று பேர் அடங்கிய குழு

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிறிலங்கா அதிபர் உண்மையிலேயே அக்கறையுடன் உள்ளாரா - சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி | Question By Suresh To Ranil Solving Ethnic Problem

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

அதிபரின் டில்லி விஜயத்தைத் தொடர்ந்து, 24.07.2023 அன்று மாலை, அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் திரு. விக்னேஸ்வரனையும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்களையும் தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்பொழுது, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை தாம் நியமித்திருப்பதாகவும் அவர்களினூடாக 13ஆவது திருத்தம் தொடர்பாக பேசி நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதுடன், கலாநிதி விக்னேஸ்வரன் உள்ளிட்ட 5 பேரையும் தாம் நியமித்த மூன்றுபேரை உள்ளடக்கிய குழு இவர்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டது.

இவை தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார்.

13 ஆவது திருத்தம்

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிறிலங்கா அதிபர் உண்மையிலேயே அக்கறையுடன் உள்ளாரா - சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி | Question By Suresh To Ranil Solving Ethnic Problem

இதனைத் தொடர்ந்து அதிபர் அவர்கள் 26ஆம் திகதி அன்று மாலை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைத்திருந்தார்.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் ஜேவிபியையும் தவிர, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ்க் கட்சித் தலைவர்கள், வடக்கு-கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம் கட்சி தலைவர்கள் மற்றும் ஏனைய சிங்கள கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

குறிப்பாக இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும் தமிழ் மக்களுக்கு எவ்வித அதிகாரங்களும் பகிரப்படக்கூடாது என்றும் காவல்துறை அதிகாரம் வழங்கப்படவே கூடாது என்றும் 13ஆவது திருத்தம் தேவையற்றது என்றும் கூறுகின்ற சிங்கள பௌத்த இனவாதக் கருத்துகளையே தொடர்ந்து பேசிவருகின்ற சரத் வீரசேகர, விமல்வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரை 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும் மாகாணசபைத் தேர்தல்கள் உடன் நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்திய பிரதமருடனான சந்திப்பு

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிறிலங்கா அதிபர் உண்மையிலேயே அக்கறையுடன் உள்ளாரா - சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி | Question By Suresh To Ranil Solving Ethnic Problem

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு  அதிபருக்கு மக்கள் ஆணை இல்லை என்றும் மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதிபர் அதுபற்றி யோசிக்கலாம் என்றும் மேற்கண்ட இனவாத தலைவர்கள் கூறினார்கள்.

ஏனைய சிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரையில், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தாங்கள் ஒத்துழைப்பதாகக் கூறினார்கள்.

அப்படி இருந்தபொழுதும்கூட, உங்களுக்கு மாகாணசபைத் தேர்தல் தேவையா? அதிகாரப்பகிர்வு தேவையா என்ற கேள்வியை முன்வைத்து அதிபர் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தமையானது அவர் உண்மையிலேயே 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க அவர்களைப் பொறுத்தவரையில், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதென்பதே அவரது பிரதானமான சிந்தனையாகும். அதற்குப் பங்கம் வரக்கூடிய எவ்வித நடவடிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

இலங்கையைப் பொருளாதார சரிவிலிருந்து மீட்பதற்காக 4பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கிய இந்திய பிரதமரை ரணில் விக்ரமசிங்க அவர்கள் டில்லியில் சந்தித்தபொழுது, 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பதை இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.

ஆகவே இந்திய பிரதமரையும் பகைத்துக்கொள்ளக்கூடாது, வடக்கு-கிழக்கு, மலையக மக்களின் வாக்கு வங்கிகளையும் இழந்துவிடக்கூடாது, சிங்கள பௌத்த வாக்கு வங்கியையும் பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற கணக்கில் காலம் கடத்துவதே அதிபரின் நிலைப்பாடா? என்ற கேள்வி எழுகின்றது.

மாகாணசபை முறைமை

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிறிலங்கா அதிபர் உண்மையிலேயே அக்கறையுடன் உள்ளாரா - சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி | Question By Suresh To Ranil Solving Ethnic Problem

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது 1988ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களால் அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட்டது.

ஆகவே அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம் அவசியம்தானா? என்ற கேள்வியும் எழுகின்றது.

மாறிமாறி சிங்கள பௌத்த இனவாத ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தமிழ் மக்களும் இந்த நாட்டின் சிங்கள மக்களைப் போன்றே பூர்வீகக் குடிகளாவர். அவர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதற்கும் தமது பிரதேசத்தைத் தாமே அபிவிருத்தி செய்துகொள்வதற்கும் சகல உரித்துகளையும் கொண்டவர்கள்.

அவர்கள் தங்களுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் மாகாணசபை முறைமை. ஆனால் வடக்கு-கிழக்கிற்கு மட்டும் அதனை மட்டுப்பபடுத்தாமல் சிங்கள பகுதிகளையும் இணைத்து ஒன்பது மாகாணங்களுக்கானதாக ஜே.ஆர். ஜெயவர்த்தன மாற்றியமைத்தார்.

இப்பொழுதும்கூட, வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள்தான் தமக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்பது மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு பற்றி அதிபர் அவர்கள் பேசுவது அர்த்தமற்றது.

தமிழ் மக்கள் வலியுறுத்தல்

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிறிலங்கா அதிபர் உண்மையிலேயே அக்கறையுடன் உள்ளாரா - சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி | Question By Suresh To Ranil Solving Ethnic Problem

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை, காவல்துறை அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் உட்பட ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வு என்பது அவசியமானது.

இவை சிங்களப் பகுதிகளுக்குத் தேவையா இல்லையா என்பதை அதிபரோ, அரசாங்கமோ தீர்மானிக்கலாம். ஆனால் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு இவை தேவை என்பதை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்கள் தங்களது பிறப்புரிமையான அதிகாரங்களைக் கேட்கிறார்களே தவிர, உங்களிடம் யாசகம் கேட்கவில்லை. தருவதற்கோ மறுதலிப்பதற்கோ உங்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இந்த நாட்டின் எதிர்காலம் என்பது இருள்மயமானதாகவே இருக்கும் என்பதை அரசாங்கமும் சிங்கள இனவாத சக்திகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே அதிபர் அவர்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளைக் கைவிட்டு, 13ஆவது திருத்தத்தை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் முழுமையாக நிறைவேற்ற முன்வரவேண்டும்.

ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி