வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை சரிபார்க்க துரித இலக்கம் அறிமுகம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை சரிபார்க்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் துரித இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி 1989 என்ற துரித இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு வேலை வாய்ப்புகளைச் சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த ஏழு மாதங்களில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தொழில் தேடுபவர்களை ஏமாற்றியதற்காகச் சந்தேக நபர்களிடமிருந்து ரூ.199.4 மில்லியனுக்கும் அதிகமான தொகை மீட்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஐந்து சோதனைகளையும் நடத்தியது.
அவற்றில் ஒன்று சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனம் மீது மேற்கொள்ளப்பட்டது.
உரிமம் பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 36 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2024 ஆம் ஆண்டில் மட்டும், வேலைவாய்ப்பு தொடர்பான மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணியகம் ரூ.18.25 மில்லியனை மீட்டுள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 4,658 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோசடி வழக்குகள் பதிவாகியுள்ள இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புகளைக் கையாளும் போது, குறிப்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
