மாவையின் மரணத்திற்கு காரணம் சாணக்கியனே : அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழரசு உறுப்பினர்
சாணக்கியன் (R.Shanakiyan) மற்றும் சில துஷ்டர்கள் மத்திய குழுக் கூட்டத்தில் வைத்து தரக்குறைவாக பேசியது தான் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) கடுமையாக பாதித்திருந்தது என அவரது சகோதரர்கள் தன்னிடம் தெரிவித்ததாக என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறிப்பிட்ட நபர்களால் தான் தமது சகோதரர் மாவை இறந்தார் என்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதாக உமாகரன் இராசையா குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் மீதான கொலைவெறித் தாக்குதல்களின் போது மாவை ஐயா கடுமையாக தாக்கப்பட்டமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததுடன் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டமையும் மாவை ஐயாவின் மரணத்திற்கு மற்றுமொரு காரணம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)