அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது சரமாரி தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் (Australia) இந்திய மாணவா் மீது ஒரு கும்பல் இனரீதியாக அவதூறாகப் பேசி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இந்திய மாணவர் தனது வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பலைச் சோ்ந்தவா்கள், தங்கள் வாகனத்தை நிறுத்த அவரது வாகனத்தை அகற்ற வலியுறுத்தியுள்ளனர்.
இனரீதியாக கேலி
இதற்கு அவா் மறுத்ததால், அந்த கும்பல் மாணவரை இனரீதியாக கேலி செய்த நிலையில், அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் இந்திய மாணவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காவல் துறை
அருகில் இருந்த மற்றவா்கள் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தி 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்துள்ளனர்.
இது தொடா்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவா் கருத்து தெரிவிக்கையில், “எனது தலையிலும் மற்றும் முகத்திலும் சரமாரியாக தாக்கியதுடன் இதில் கண், தாடை மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் ரத்தக் காயம் ஏற்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
