தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Railways
Department of Railways
By Dilakshan
தொடருந்து பயணச்சீட்டு வழங்கும் பணிகளில் இருந்து இன்று (30) மாலை 4.30 மணி முதல் விலகுவதாக நிலைய அதிபர்கள் (Station Masters) அறிவித்துள்ளனர்.
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தவிசாளர் தசுமேத சோமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் கூடிய தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபை, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்காக எடுத்த தீர்மானமே இதற்குக் காரணமாகும்.
தீர்மானம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே நிலைய அதிபர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இதேவேளை, தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருடனான பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாக சுமேத சோமரத்ன நேற்று (29) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு… 11 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்