புகையிரத திணைக்களத்தின் முதலாவது மறுசீரமைப்பு குழுக்கூட்டம் விரைவில்!
Presidential Secretariat of Sri Lanka
Sri Lanka Railways
By Kathirpriya
புகையிரதத் திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பாக ஆராய்வதற்கான குழுக்கூட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி கூடவுள்ளது.
இதுவே குழுவின் முதலாவது உத்தியோகபூர்வ கூட்டமாகும், கொழும்பிலுள்ள அதிபர் செயலகத்தில் இந்த கூட்டம் கூடவுள்ளது.
அதிபரின் செயலாளரினால் அமைச்சரவையின் தீர்மானத்தின் படி இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது
14 உறுப்பினர்கள்
இந்தக்குழுவில் மொத்தம் 14 உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்
அதில் புகையிரதத் திணைக்களத்தின் முன்னாள் பொது மேலாளர்கள் இருவர் மற்றும் சமிக்ஞை துணைத் துறையின் முன்னாள் தலைவர் உள்ளடங்கலாக 14 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.
புகையிரதத் துறையின் நீண்டகால திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு, புகையிரதத் துறையில் உள்ள தரவுகளும் இந்த கூட்டத்தில் சேகரிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.