நள்ளிரவு முதல் ரயில் சேவைகள் ஸ்தம்பிக்குமா...!
Sri Lanka
Train Strike
By Sumithiran
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் இன்று இரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு பிரதிப் பொது முகாமையாளர் (வணிக) பதவியை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்
தொழிற்சங்க மத்தியக் குழு அவசரக் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்சினை குறித்து ஆலோசித்து, இந்த நியமனத்துக்கு எதிராக உடனடியாக 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்தது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத நிலைய அதிபர்கள் சகல சேவைகளிலிருந்தும் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி