புகையிரதப் பாதைகளில் இரும்பு திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு - புகையிரதத் திணைக்களம்
sri lanka
people
theft
railway track
By Thavathevan
புகையிரதப் பாதைகளில் இரும்பு திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி மொரட்டுவை, கொரளவெல்ல, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் அதிகளவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புகையிரதப் பாதுகாப்பு ஊழியர்களின் பற்றாக்குறையே இந்த நிலைமைக்குக் காரணம்.
அத்துடன், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை புகையிரதப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலைமையால் புகையிரத விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி