மட்டக்களப்பில் கடும் காற்று ,மழை தென்னைமரம் வீட்டில் முறிந்து விழுந்தது. (படங்கள்)
batticaloa
people
Flood
rain
By Thavathevan
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் தென்னை மரமொன்று எருவில் கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் வீழ்ந்துள்ளது. அவ்வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக பலத்த மழைபெய்து வருகின்ற இந்நிலையில் பெரும்பாலான தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பல வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது.
இதனால் அங்குள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்களும் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.







1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி