விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்த கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை -ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை
கருணாநிதி ஆட்சி கலைப்பு
1991 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது.அதேபோன்று தற்போது தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமினல் குற்றம். ஸ்டாலின் தலையை சிலுப்பினால் 1991-ல் நடந்தது இப்போது நடக்கும்.
இவ்வாறு கடும் தொனியில் எச்சரித்துள்ளார் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமினல் குற்றம். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக திருமாவளவன், சீமான் ஆகியோர் திட்டமிட்டுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அரசு அனுமதிக்க கூடாது.
திருமாவளவன், சீமான் தேசத் துரோகிகள்
திருமாவளவனும், சீமானும் தேசத் துரோகிகள். அவர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லவர். அவரை சுற்றி இருப்பவர் கொம்பு சீவி விடுவார்கள். அவர் தலையை சிலுப்பினால் 1991-ல் நடந்தது இப்போது நடக்கும்.
தற்போது தமிழக மக்களுக்கு விரோதமான ஆட்சியே நடைபெற்று கொண்டிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
