எதிர்பார்ப்புகள் தவிடுபொடி..! அதிபர் ரணிலின் மாற்று நடவடிக்கை
ராஜபக்சர்களின் நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்துடன் சிறந்த தொடர்புகளையுடைய அதிபர் நாட்டின் பொருளாதார நெருக்கடியை நீக்க நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவை வீணான எதிர்பார்ப்பாக மாறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை எடுக்காது ராஜபக்ச குடும்பத்திற்கு சாதகமாக ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொருளாதார சிக்கல்
இலங்கை வங்கி மற்றும் ஏனைய வங்கிகள் தற்போது அரச உத்தியோகத்தர்கள் பெறுகின்ற கடனுக்கு அதிக வட்டியை அறவிடுகின்றன எனவும் தனியார் மற்றும் அரச ஊழியர்களின் முழுச் சம்பளத்தையும் கடனுக்காக வசூலிக்க தற்போதைய அரசாங்கம் திட்டமிடுகின்றது எனவும் ரோஹன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான செயல்கள் மக்களின் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

