மக்களின் வரிப்பணத்தில் ராஜபக்சர்களின் ஆடம்பரம்..!
முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு பயணங்களுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாக தகவலறியும் சட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தகவல் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் அதிபர் செயலகமும் பிரதமர் அலுவலகமும் வழங்கிய தகவல்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
அதற்மைகய கடந்த வருடம் 5 வெளிநாட்டு விஜயங்களுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச 2021ஆம் ஆண்டு 2 வெளிநாட்டு விஜயங்களுக்கு 36 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.
கோட்டாபய - மகிந்த

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச 3 வெளிநாட்டு விஜயங்களுக்கு சுமார் 7 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச 2021ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பங்களாதேஷ் மற்றும் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.