தேர்தல் களத்தில் புதிய வியூகங்களுடன் இறங்கிய ராஜபக்ச தரப்பினர்!
மொட்டு கட்சியின் பிரதிநிதிகளுக்கு 2,500 தலைமைத்துவ பயிற்சி கூட்டங்களை "சத் ஜனரல" என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது செயலமர்வு கொழும்பில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
இதில் கட்சியின் 200 சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு, கிராமத்திற்கு சென்று கட்சி விவகாரங்களை தெரிவிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பிரதம அதிதியாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவினால் சரியான தொடர்பாடல் தொடர்பிலான நீண்ட விரிவுரையும் அங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |