மக்களின் சேமிப்பில் 70 வீதத்தை ராஜபக்சக்கள் கொள்ளையடித்துள்ளனர்! ஹர்ஷ குற்றச்சாட்டு
இலங்கை மக்களின் சேமிப்பில் 70 சதவீதத்தை ராஜபக்சர்கள் கொள்ளையடித்துள்ளார்கள் என்பதில் எவ்வித தவறும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கைதியாக சிறைப்பட்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கை காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டதற்கு ஒப்பானதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எக்காலத்திலும் இலங்கையை போன்று பங்களாதேஷை வீழ்ச்சியடைய செய்ய போவதில்லை என பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் சேக் ஹசீனா குறிப்பிட்டுள்ள விடயம் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது.இலங்கையை விட பொருளாதார மட்டத்தில் பின்னணியில் இருந்த பங்களாதேஷ் தற்போது இலங்கைக்கு கடன் வழங்கும் அளவிற்கு சடுதியாக வளர்ச்சியடைந்துள்ளது.
பண்டங்கள் ஏற்றுமதி
பங்களாதேஷ் நாடு மாத்திரமல்ல வலய நாடுகள் பல எம்மை விட முன்னேறி செல்கின்றன.1995ஆம் ஆண்டு ஆடைத் தொழிற்துறையை தொடர்ந்து இலங்கையும், வியட்நாம் நாடும் வருடத்திற்கு மூன்று அரை பில்லியன் பண்டங்களை ஏற்றுமதி செய்தன.
2021ஆம் ஆண்டு இலங்கை பன்னிரென்டரை பில்லியன் பண்டங்கள் ஏற்றுமதி செய்யும் போது வியட்னாம் மூந்நூற்றைம்பது டொலர் பில்லியன் பண்டங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்நாட்டு தலைவர்கள் உலகிற்கு ஏற்றாட்போல் தமது நாடுகளை மாற்றியமைத்துள்ளார்கள்.நாடு முழுவதும் வரி வேலி அமைக்கப்பட்டது, பொய்யான வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
உணவு பணவீக்கம்
பொய்யான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு இனவாதத்தை தோற்றவித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு நிலைப்படுத்தியுள்ளார்கள். வாழ முடியாத சூழலை மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.
அரசாங்கத்தின் தரப்படுத்தலுக்கமைய கடந்த மாதம் உணவு பணவீக்கம் 80 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
பாண் ஒரு இறாத்தலின் விலை 300 ரூபாவை எட்டும். நாட்டு மக்களின் சேமிப்பில் 70 சதவீதத்தை ராஜபக்ஷர்கள் கொள்ளையடித்துள்ளார்கள் என்று குறிப்பிடுவது தவறொன்றுமில்லை.அதுவே உண்மை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போன்ற விரிவான செய்திகளை காண்பதற்கு மதியநேர செய்திகளுடன் இணைந்திருங்கள்

