ராஜபக்சர்களின் திட்டம் அம்பலம் - வெளிப்படுத்திய முன்னாள் அரச தலைவர்
plan
Maithiripala sirisena
rajapaksas
By Sumithiran
தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பில் முடிச்சு போடுவதற்கு தயாராகி வருவதாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
‘அரசதலைவர் தேர்தலுக்கு குறைந்தது இரண்டரை வருடங்கள் உள்ளன. அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
தமது அடுத்த அதிகாரத்துக்கு அரசியல் சாசன முடிச்சுப் போட முயல்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. எனவே, எதிர்வரும் தேசியத் தேர்தல் பெரும்பாலும் நாடாளுமன்றத் தேர்தலாகவே அமையும் என நான் கருதுகின்றேன் எனத் தெரிவித்தார்.
