அமெரிக்காவிற்கு தப்பி ஓடிவிட்டாரா பசில்?? ராஜபக்ச குடும்பத்திலிருந்து வந்த பதில்
நாட்டின் பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும்
தப்பியோடவே மாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பசில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளார் என்று எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
பசில் ராஜபக்சவுக்கு எதிராக இதற்கு முன்னரும் இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறைகூறுவதற்கு ஒன்றுமில்லாததால்தான் எதிரணிகள் பசில் விவகாரத்தை கையிலெடுத்துள்ளன. இது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு.
அவர் சிறப்பாகச் செயற்படக்கூடியவர். அவரும் மனிதர். தனிப்பட்ட
தேவைகள் இருக்கலாம். அதற்காக அவர் அமெரிக்கா சென்றிருக்கலாம். மீண்டும்
வருவார். தப்பியோடுபவர்கள் ராஜபக்சக்கள் அல்லர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
