சிங்களவர்களால் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவை மீண்டும் ஸ்தாபிக்க தீவிர நடவடிக்கை!!
Go Home Gota
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Rajapaksa Family
By Kanna
அம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்ச அருங்காட்சியகம், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பெற்றோரின் நினைவாலயத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது இடிக்கப்பட்ட நினைவாலயத்தை புனரமைப்பதற்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை சேகரிப்பதற்காக பொறுப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் உயர் காவல் அதிகாரியினால் காவல்துறை அத்தியட்சகர்களுக்கு பொருத்தமற்ற வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
