ராஜபக்சக்கள் ஆட்சியை கைப்பற்றுவார்கள் - மீண்டும் வருவோம்! மொட்டுக்கட்சி உறுப்பினர் சபதம்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Sri Lankan political crisis
Rajapaksa Family
By Kanna
ராஜபக்சக்களால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பலத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளோம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது பலத்தை வெளிப்படுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது.
தாடி வைத்த போதைக்கு அடிமையானவர்களால் ராஜபக்சக்களை விரட்டியடிக்க முடியாது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் ஒரு அரசாங்கத்தை கவிழ்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு தனது பலத்தை வெளிப்படுத்தும் " எனக் குறிப்பிட்டார்.