மாணவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி விரிவுரையாளர்கள் அமைதி போராட்டம்
Rajarata University of Sri Lanka
By Beulah
ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் இன்று (16) முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பிற்கு அமைவாக அமைதி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்கால கற்றல் செயற்பாடுகள்

இந்நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் கற்றல் நடவடிக்கையில் இருந்து விலகப் போவதாக போராட்டத்தில் கலந்து கொண்ட ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி தர்மசிறி திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி