யாழில் சாந்தனுக்கு நினைவஞ்சலி!
சாந்தன் ஏன் சந்தணமானார் எனும் தலைப்பிலான நினைவஞ்சலி யாழ்ப்பாணத்தில் இன்று(7) இடம்பெற்றது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனின் மரணத்தைத் தொடர்ந்து அவர் எழுதிய புத்தகங்கள் அவரது சிறை அனுபவங்களை நினைவுகூறும் வகையிலான நிகழ்வினை யாழ்ப்பாண மாவட்ட போராளிகள் நலனுபுரிச்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றி சாந்தன் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சாந்தன் ஏன் சந்தணமானார்
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் கை.ரி. கணேசலிங்கம், தவத்திரு வேலன் சுவாமிகள், சொற்செற்செல்வர் ஆறுதிருமுருகன் உள்ளிட்ட மதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாந்தனின் தாயார் மற்றும் சகோதரர்களிடம் போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால் அவரது திருவுருவப்படம் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் புத்தகப் பைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |