சாவகச்சேரி வைத்தியசாலையின் தற்போதைய நிலை...! விளக்கமளிக்கும் பதில் வைத்திய அத்தியட்சகர்
Sri Lanka
Hospitals in Sri Lanka
Doctors
By Shalini Balachandran
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்(Chavakachcheri Base Hospital) நான் பதவியேற்றதன் பின் வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றசாட்டுகள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் இல்லையென வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வைத்தியசாலையில் நடைபெறும் அனைத்து சம்பவங்கள் தொடர்பாக நான் தனி நபராக கவனித்துக்கொண்டு இருக்கின்றேன்.
அபிவிருத்தி பணி
என்னுடைய நியமனமானது பொதுமக்களை பாதிக்காது குறித்த வைத்தியசாலையை பழைய சூழலுக்கு கொண்டு வருவதே அதை நான் செய்துள்ளேன்.
அத்தோடு, வைத்தியசாலை அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்