ரம்புக்கனை சம்பவம் - காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
shooting
rises
injured
rambukkana
By Sumithiran
ரம்புக்கனவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுவில் 8 காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ரம்புக்கனை மற்றும் கேகாலை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (ஏப்ரல் 19) இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன் காரணமாக கண்டி - கொழும்பு புகையிரதப் பாதை ரம்புக்கன பிரதேசத்தில் தடைப்பட்டது.
இதனால், 8 ரயில்கள் தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி