ரம்புக்கனை துப்பாக்கிசூடு - காவல்துறை மா அதிபர் வெளியிட்ட தகவல்
ரம்புக்கனையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியிருந்தததாக காவல்துறை மா அதிபர் (IGP) தெரிவித்துள்ளார்.
30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைப்பதைத் தடுப்பதற்காக காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை கையாண்டதாக காவல்துறை மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது காவல்துறையினர் அதிக பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை அறிய காவல்துறை தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருளைக் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
