சீரற்ற காலநிலை! இரு வீட்டின் மீது முறிந்து வீழ்ந்த மரம்
Police
Army
Weather
SriLanka
Nallathanni
By Chanakyan
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றால், மரமொன்று முறிந்து விழுந்தில் லயக்குடியிருப்பின் இரண்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதன்போது வீடுகள் கடுமையாக சேதமடைந்த நிலையில், எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில், நல்லதண்ணி பொலிஸாரும், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி