நரம்புகள் அறுக்கப்பட்ட நிலையில் ரங்க ராஜபக்ச! நடந்த திகில்
இலங்கையில் இன்று மேதினமும் வெசாக் பௌர்ணமியும் ஒன்றாக வந்ததால் அரச வெசாக் உற்சவம் இந்த மாதத்தின் இறுதிக்கு நகர்த்தப்படதால் வெசாக் அதிர்வுகள் குறைவாகவும் மே தின அதிர்வுகள் பெரிதாகவும் வந்தன.
ஆனால் சிறிலங்கா திறைசேரியில் கடந்த ஜனவரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடியில் சிக்கி பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்ப்பட்ட 4 உயர் அதிகாரிகளில் ஒரு முக்கிய அதிகாரி தனது உடலின் இரத்த நாடிநாளங்கள் அறுக்கப்பட்டு உடாமாக மீட்கப்பட்ட சம்வம் அதிர்ச்சியாக வந்தது.
ரங்க நிஷாந்த ராஜபக்ச,என்ற இந்த50 வயதான அதிகாரி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தாலும் இந்த மோசடியை மறைக்க யாரேனும் ஒருவர் அவரை கொலைசெய்திருக்கலாமா என்ற ஐயங்களும் எழுந்துள்ளன.
ஏனெனில் இவர்தான் இந்த மோசடி தொடர்பாக முதன்முதலில் சிறிலங்கா சீஐடியிம் முறையீடு செய்ததுடன் கடந்த மாத்தில் இந்தவிடயம் தொடர்பாக 3 முறை சிஐடி பணியகத்துக்கு சென்று வாக்குமூலம் அளித்தவர்.
ஆனால் இவர் தற்போது மரணடைந்த திகில் வந்துள்ள நிலையில் இந்த விடயங்கள் மற்றும் வடக்கின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் வைக்கும் குறி குறித்த சில பரபரபப்புகளை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |