ஹிட்லரின் பாதையில் அநுர அரசு - ரணில் கடும் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe UNP NPP Government
By Thulsi Oct 06, 2025 03:30 AM GMT
Report

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார்.

வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை குறித்தும் இங்குள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைப்பது முறையற்றது என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு நாடாக சென்று நிதி திரட்டுவேன்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

நாடு நாடாக சென்று நிதி திரட்டுவேன்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

ஜன்னலில் இருந்து தூக்கி எறியப்பட்டார்

அவர் மேலும் கூறுகையில், "1933 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்தபோது, அவருக்கு 50 வீதத்துக்கும் அதிகமான ஆதரவு இருக்கவில்லை.

ஹிட்லரின் பாதையில் அநுர அரசு - ரணில் கடும் குற்றச்சாட்டு | Ranil Accuses Anura Gov Of Following Hitler Path

ஹிட்லரின் கட்சி வெறும் 44 வீதமான வாக்குகளையே பெற்றது. எனவே, தனது அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஹிட்லர் அன்று எதிர்க்கட்சிகளை அழித்தார்.

கட்சிகளை மாத்திரமல்லாமல் எதிர்க்கட்சி அலுவலகங்களையும் இல்லாதொழித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், செக்கோஸ்லோவியா மற்றும் ஹங்கேரியைக் கைப்பற்ற வேண்டிய தேவை கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது.

அங்கு சோவியத் படை மிக வலுவாக வேரூன்றி இருந்தது. இருப்பினும் செக்கோஸ்லோவியா நிறுவனரின் புதல்வர் வெளியுறவு அமைச்சகக் கட்டடத்தில் நான்காவது மாடி ஜன்னலில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

ஆசிரியர்களுக்கு பாதிப்பும் ஏற்படாது - பிரதமர் ஹரிணி உறுதி

ஆசிரியர்களுக்கு பாதிப்பும் ஏற்படாது - பிரதமர் ஹரிணி உறுதி

எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு

இந்த விடயம் அன்றைய எதிர்க்கட்சி நாடாளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது. ஜனாதிபதியும் அவரது தேசிய மக்கள் சக்தி அரசும் இலங்கையில் தற்போது செய்வது என்ன? ஜனாதிபதி அநுரவுக்கு வெறும் 44 வீதமான வாக்குகளே உள்ளன.

ஹிட்லரின் பாதையில் அநுர அரசு - ரணில் கடும் குற்றச்சாட்டு | Ranil Accuses Anura Gov Of Following Hitler Path 

மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகின்றது. அதனைத் தடுக்கவே அவர் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரவின் மற்றொரு முயற்சி நீதித்துறையை அடிபணியச் செய்வதாகும்.

குறைந்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க எதிர்க்கட்சிகளை ஒழித்தது போலவே, தேசிய மக்கள் சக்தியும் அதே வழியில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குகின்றது. நீதித்துறையைக் கட்டுப்படுத்தவும் இந்த அரசு முயல்கின்றது என்றார். 

விஜய்க்கு பின்னப்படும் வலை: கரூர் சம்பவம் விபத்து அல்ல - எடப்பாடி அதிரடி

விஜய்க்கு பின்னப்படும் வலை: கரூர் சம்பவம் விபத்து அல்ல - எடப்பாடி அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021