மகிந்தவின் தயாரிப்பில் நடிக்கும் ரணில்..! நாடகத்தை அம்பலப்படுத்திய மனோ
நடிகர்
ராஜபக்ச அணியினர் கொள்ளையடித்த பணத்தை தேடிக்கண்டு பிடித்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முதலில் செய்வதற்கு தயாராக வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் வருமான வரி பற்றி கருத்துக்களை முன்வைக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களால் கொள்ளையடித்து களவாடப்பட்ட பணம் உகண்டாவிலா, துபாயிலா, சிங்கப்புரிலா, ஐரோப்பாவிலா இருக்கின்றது என்பதனை தேடி கண்டு பிடித்து இலங்கைக்கு கொண்டு வரவதுடன் கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் அதிபரான ரணில் விக்ரமசிங்க வெறும் நடிகர் மட்டும்தான் மற்ற ஏனைய திரைக்கதை, வசனம், தயாரிப்பு அனைத்துமே ராஜபக்ச குடும்பமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் ஆணையை பெற்ற நாடாளுமன்றத்தினை தேர்தல் வாயிலாக கொண்டு வந்து மக்களுக்கான சிறந்த ஆட்சியினை நடத்த அந்த அரசாங்கம் முன்வரவேண்டும்.
ஒரு லட்சம் வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அந்த முடிவை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
