தனி நாடாக பாலஸ்தீனம்..! முகத்தில் அறையும் செயல்: கடும் கோபத்தில் இஸ்ரேலும் அமெரிக்காவும்
பாலஸ்தீன அரசை பிரான்ஸ் (France) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார்.
இமானுவேல் மக்ரோனின் அறிவிப்பிற்கு அமெரிக்காவும் (USA) இஸ்ரேலும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இது ஒரு கண்மூடித்தனமான செயல் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க் ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார்.
ஆபத்தானது மற்றும் தவறானது
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதியின் யோசனையை அமெரிக்கா நிராகரிக்கின்றது என மார்க் ரூபியோ கூறியுள்ளார்.
சமாதானத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் ஹமாசின் பிரச்சாரத்திற்கு இது உதவும், ஒக்டோபர் ஏழாம் திகதி பலியானவர்களின் முகத்தில் அறையும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது ஆபத்தானது மற்றும் தவறானது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது.
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியை நாடவில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
