அதிபர் தேர்தலில் ரணில் -அநுர இடையே கடும் போட்டி
அடுத்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கவிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்கவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுமென கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சதுரங்க அபேசிங்க தனது சமூக வலைத்தளக் கணக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்ட நிலையில் இது தெரியவந்துள்ளது.
வாக்குகளின் வீதம்

இதன்படி ரணில் விக்ரமசிங்க 55% அனுர திஸாநாயக்க 44% வாக்குகளைப் பெறுவர்.
இலங்கையின் தலைவிதி எதிர்வரும் அதிபர் தேர்தலில் தங்கியுள்ளது எனவும், நவதாராளவாதத்தின் ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முற்போக்கு இடதுசாரி மக்கள் இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுர திஸாநாயக்கவிற்கும் இடையில் போட்டி அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சதுரங்க அபேசிங்க, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்கவின் மகன் ஆவார்.