பிரதமர் பதவிக்கு ரணில்: உத்தியோகபூர்வமான தகவல் அல்ல! - ரஞ்சித் ஆண்டகை
பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க இருப்பதாக வெளியான தகவல் உத்தியோகபூர்வமானது இல்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக முன்னாள் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும் ரணில் தரப்பிலிருந்து அது தொடர்பான எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை, ரணில் பிரதமராக பதவியேற்பதில் பெரும் சூழ்ச்சியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியினர் பகிரங்கமாக தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போது அப்போது பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
