மீண்டும் நாளையதினம் நீதிமன்ற படியேறுகிறார் ரணில்
பொது சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது தொடரப்பட்ட முறைப்பாடு நாளை (29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள 'வோல்வர்ஹாம்டன்' என்ற தனியார் பல்கலைக்கழகத்தில் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தனியார் பயணம் மேற்கொண்டு ஒன்றரை நாட்களுக்குள் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் அரசு பணத்தை வீணடித்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
நீதிமன்ற அறையில் காணொளி எடுத்தவர்களை கைது செய்ய உத்தரவு
இதனிடையே ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையான இரவு நீதிமன்ற அறையில் நடந்த நிகழ்வுகளை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் நீதிமன்றத்திற்குச் செல்லும் பாதைகளைத் தடுக்க கூடியிருந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு முன்னாள் நீதவான் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்