ரணில் மற்றும் பசிலுக்கு இடையிலான பேச்சுவார்த்தை: இணக்கப்பாடின்றி முற்று
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்(Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் (Basil Rajapaksa) இடையில் நடைபெற்ற மற்றுமாரு சுற்று பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இருவருக்கும் இடையில் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் முதலில் அதிபர் தேர்தல் நடத்தப்படுமென ரணில் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
அத்தோடு தாம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து ஜூலை மாதம் அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அதிபர் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிப்பது குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில் அது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட முடியுமென ரணில் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |