ரணிலிடம் 80 கோடி வாங்கி சாராய வினியோகம் செய்த தமிழ் தலைவர்!
அரச நிதி மோசடியில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க தென்னிலங்கை தலைமைகள் முந்தி அடித்துக்கொண்டு வந்த பின்னணி என்பது அவருக்கான ஆதரவையும் தாண்டி அச்சத்தினால் கூட இருக்கலாம்.
ஆனால் ரணில் என்பவர் தமது அரசியல் வரலாற்றில் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை அறிக்கையிட்டால் அது தற்போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விட பல மடங்கு தண்டனைகளை பெற்றுக்கொடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த பின்னணியில் ரணிலுக்காக சாணக்கியமற்ற சில தமிழ் அரசியல் தலைவர்களும் ஆதரவை ஒன்றோடு இரண்டாக வெளிப்படுத்தியமையானது, காலம் காலமாக நீதிக்காகவும், உரிமைக்காகவும் போராடும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் தமிழரின் வாக்குவங்கியை தனதாக்க பெருமளவு நிதியை கிழக்கின் தமிழரசுக்கட்சியை சார்ந்த ஒரு எம்.பிக்கு வழங்கியிருந்தார்.
ஆனால் அவர், அந்த நிதியை அதன்பின் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன் அரசியல் நிலையை தக்கவைத்துக்கொள்ள என்றுமில்லாத அளவு தமிழர்பகுதியில் சாராய விநியோகத்தை மேற்கொண்ட செயல் விமர்சிக்கத்தக்க ஒன்று.
இன்று ரணிலுக்கு அரசாங்கமும், நீதியும் தண்டனையை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கையில் தென்னிலங்கை அரசியலை விமர்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஏன் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த நகர்வுக்கு மத்தியில் தமிழ் அரசியல் தலைமைகளின் வெளிப்படுத்தப்படாத மறைகரங்களை விரிவாக ஆராய்கிறது உண்மைகள் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

